Mar 25, 2011

ஊர்ப்புறத்துப் பறவைகள் : திரு.கோவை சதாசிவம்





திரு.கோவை சதாசிவம் எழுதிய "ஊர்ப்புறத்துப் பறவைகள்" வாசித்தேன்.

நாகணவாய் (common Myna ),
பைங்கிளி (Rose ringed parakeet),
பனங்காடை (Indian Roller),
கருங்கரிச்சான் (Black Trongo),
நாட்டு உழவாரன் (House Swift),
கருங்குயில் (Asian Koel),
குருட்டுக் கொக்கு (Indian Pond Heron),
சிறிய நீர்க்காகம் (Little Cormorant),
உண்ணிக் கொக்கு (Cattle Egret),
கொண்டலாத்தி (Common Hoopoe),
செண்பகம் (Greater Coucal),
செம்மூக்கு ஆள்காட்டி (Red wattled lapwing),
புள்ளி ஆந்தை (Spotted Owlet),
மாடப் புறா (Rock Pigeon),
ஊர்ப் பருந்து (Black Kite),
ஊதாத் தேன்சிட்டு (Purple Sun Bird),
புள்ளிச் சில்லை (Spotted munia),
சின்னான் (Red vented Bul Bul),
வெந்தலைச் சிலம்பன் (White headed Babbler),
வெண்மார்பு மீன்கொத்தி (White Preasted King fisher),
பொன் முதுகு மரங்கொத்தி (Black rumped flame Pack),
காக்கை (House crow),
சிட்டுக்குருவி (House sparrow)
போன்ற நம் வீட்டை சுற்றிலும் பறந்து திரியும் பறவைகளை பற்றி, சிறிய குழந்தைகளுக்கும் புரியும் வகையில் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

நாம் ஓவ்வொரு நாளும் கடந்து போகிற பறவைகளின் பெயர்களை கூட சரியாக அறிந்து கொள்ளமால் இருப்பது எவ்வளவு பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தையும் பத்து வயதை கடப்பதற்கு முன்னதாகவே இந்த புத்தகத்தை படித்திருக்கு வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு பறவையில் இயல்பையும், அதன் உடல் அமைப்பு, நிறம், குணம் போன்றவற்றை தெளிவாக எழுதியிருக்கிறார். எத்தனை முட்டைகள் வரை இடுகிறது, எப்படி முட்டைகளை பாதுகாக்கிறது, அதன் உணவு முறை என்ன என்பதையும் அழகாக எடுத்துரைக்கிறார்.

இன்றைய சூழ்நிலையும் பறவைகள் சந்திக்கிற நெருக்கடி, அவற்றின் வாழ்க்கை எப்படி பாதிக்கிறது, இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க பறவைகள் படும் சிரமம் என இவர் எழுதியிருக்கும் பாங்கு, பறவைகளின் மேல் இவர் எவ்வளவு அன்பு கொண்டவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பறவைகளை பார்க்கும் போது கிடைக்கும் புத்துணர்ச்சி அற்புதமானது. அதை யாரும் இழந்து விடாதீர்கள். எல்லா பறவை இனங்களும் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. வாழ்வதற்கே போராடுகிறது.

பறவைகளை வேடிக்கை பாருங்கள்.
பறவைகளுக்காக சிந்தியுங்கள்.
பறவைகளுக்காக பேசுங்கள்.
பறவைகளுக்கும் இடம் கொடுங்கள்.

பறவையியல் அறிஞர் திரு.சலீம் அலி சொன்னதை, திரு சதா சிவம் ஞாபகபடுத்துகிறார் :

"மனிதர்கள் இன்றி பறவைகளால் வாழ முடியும். பறவைகள் இன்றி மனிதர்களால் வாழ முடியாது."

புத்தகம் கிடைக்கும் இடம்:
வெளிச்சம் வெளியீட்டகம்,
1447 , அவினாசி சாலை,
பீளமேடு,
கோவை : 641004
0422-4370945, 98947-77291
Price: Rs.50

காக்கைக்கூடு இணையதளத்தில் வாங்கலாம் :

3 comments:

  1. வௌவால் (Flying fox) எப்படி பறவைகள் பட்டியலில் வந்துள்ளது. அது பாலூட்டி அல்லவா சதீஸ் ?

    ReplyDelete
    Replies
    1. தவறுதான்..!! இந்த புத்தகத்தில் அதை சேர்த்திருக்க வேண்டியதில்லை. கூடுதல் தகவல் தரும் என்ற அடிப்படையில் சேர்த்திருக்கலாம். ஆனாலும் வௌவால் பற்றி இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை சிறப்பானது.

      Delete
  2. இலங்கையில் இருந்து நான் எவ்வாறு இப் புத்தகத்தை வாங்குவது?

    ReplyDelete