அமைப்புகள்

 சுமார் 700 சதுர கி.மீ பரப்பளவுள்ள பழனி மலை பகுதிகளை பாதுகாக்கிற அமைப்பு "Palani Hills Conservation Council" . மரம் நடுதல் மற்றும் மலை வாழ் மக்களுக்கு தேனீ வளர்ப்பு கற்றுத் தருதல் மூலமாக வனப் பகுதிகளை பாதுகாக்க முனைகிறது. அரசங்கத்தால் இன்னமும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்கப்படவில்லை. இந்த மொத்த பரப்பும் வன காப்பகமாக அறிவிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டால் இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய வன சரணாலயம் என்ற தகுதி பெறும். நவம்பர் 2010 ல் என்னை இணைத்துக் கொண்டேன். துரிதமான சில நடவடிக்கைகள் மூலமாக இந்த மழை காலத்தில் மேலும் சில மரங்கள் நடப் படவேண்டியது அவசியமாகிறது. இதில் இணைய விரும்புவர்கள் என்னை தொடர்புகொள்ளவும்.



 
"Growing wild" என்கிற அமைப்பு பெங்களூரில் இருந்து செயல்படுகிறது. வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்களை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட அமைப்பு. வனப் பகுதிக்குள் நேரடியாக சென்று பழங்குடி மக்களை சந்திப்பதும் வனப்பாதுகாப்புக்காக  அவர்களை கையாள்வதும் இந்த அமைப்பின் நோக்கம். வனப் பகுதியின் மேன்பாடுகள் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வன விலங்குகளை கணக்கெடுக்கும் பணியினையும் மேகொண்டு வருகிறது. இந்த அமைப்பில் நான் உறுப்பினராக உள்ளேன்.



"Green Peace"அமைப்பு உலகும் முழுதும் இருந்து செயல் படுகிறது. BT கத்திரிக்காய் பற்றிய பிரச்சனை உச்சத்தில் இருந்த போது நான் என்னை இந்த அமைப்பில் இணைதுக்கொண்டேன். இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், சுற்று புறச் சூழல் பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது.



 பெங்களூரு தமிழ் சங்கம் - பெங்களூரின் தமிழ் மையம். தமிழ் மொழிக்காகவும் தமிழர் நலனுக்காகவும் போராடுகிற பழமையான அமைப்பு. கவியரங்கம், வாசகர் வட்டம் நிகழ்ச்சிகள் மாதம் தோறும் நடக்கிறது. திருவள்ளுவர் சிலை திறப்புக்கு பிறகு கவனம் ஈர்த்திருக்கிறது.