Great Auk - ஐஸ்லாந்தின் இழப்பு [Iceland]

வட அட்லாண்டிக் பெருங்கடலில் வாழ்ந்த பறக்க இயலாத பறவையினம் "Great Auk". பாறை தீவுகளில் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வந்த இந்த பறவையினம் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் அற்றுப்போனது. ஐஸ்லாந்தில் சில தீவுகளில் வாழ்ந்த இந்த பறவையினம் மனிதர்களிடம் எளிதில் மாட்டிக்கொண்டது. மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இந்த பறவையினம் மிச்சம் இருந்த போது அருங்காட்சியகங்களுக்காக இந்த பறவை அதிகமாக பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி அவை பிடிக்கப்பட்ட போது அவற்றின் முட்டைகளையும் எடுத்துச் சென்றனர். 

Taxidermy Specimen of Great Auk at Oslo Natural History Museum

அழிவின் விளிம்பில் அவை வந்த பிறகும், அவை ஒரு சிறிய ஒற்றை தீவில் தனிமைப்பட்ட போதும் மனிதன் அங்கேயும் சென்று அவற்றை கொல்லவே செய்தான். கடைசியாக பிடிக்கப்பட்ட "Great Auk" சில மீனவர்களால் கொண்டு செல்லப்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட புயலுக்கு இந்த பறவை உடன் இருப்பதே காரணம் என நினைத்து அதை கொன்றுவிட்டதாகவும் ஒரு செய்தி உண்டு. பல மில்லயன் ஆண்டுகளாக பரிணமித்த ஒரு உயிரினத்தை பாதுகாக்க பல எளிய வழிகள் இருந்தும் காலம் கடந்து விட்டது. 

மனிதர்கள் உணவுக்காகவும் இதன் சிறகுகளுக்காகவும் (தலையணைகள் செய்ய) இதை அதிகளவில் கொன்றிருந்தாலும், அருங்காட்சியகங்களில் இவற்றை கொடுத்து பணம் பெறுவதற்காக மிச்சமிருந்த சொற்ப பறவைகளும் கொல்லப்பட்டது தான் வேதனை. இது பென்குயின் கிடையாது. 

மேலும் :


Post a Comment

2 Comments

  1. டோடோவை மனிதன் அழித்தான் கல்வாரியா மரம் தானாகவே அழிந்துவிட்டது. கிரேட் ஆங் பறவையை இப்போது இழந்து விட்டோம் இயற்கையில் மற்றொன்றையும் இழக்க நேரிடும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம், இயற்கையின் பிணைப்புகள் மனிதன் அறியாதது.

      Delete